நம் நாட்டின் வரலாற்றில் மிகச் சிறந்த தருணம் மெர்டேகா சதுக்கத்தில் நமது முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் மைக்ரோஃபோனில் “மெர்டேகா! மெர்டேகா! மெர்டேகா!”என்று மலாயாவுக்கு சுதந்திரம் அறிவித்தது.
அறுபத்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன, பல்வேறு முட்கள் மற்றும் முட்செடிகள் நிறைந்த கரடு முரடான பாதைகளை கடந்து விவசாய நாட்டிலிருந்து, தொழில்துறை நாடாக, வளரும் நாடு என்ற நிலையை நோக்கி மாறி வருகிறோம்.
1963 இல் மலேசியா உருவாக்கம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் வெளியேறியது. 1969 ஆம் ஆண்டு மே 13, சோகமாக வெடித்த இனப் பதற்றங்களின் கொடூரமான அச்சமும் இருந்தது.
இருப்பினும், பல சதாப்தங்களாக, மலேசியா விரைவான பொருளாதார வளர்ச்சியைக் கண்டது, அந்தந்த துறைகளில் சிறந்ததை உருவாக்குகிறது.
இனம், மொழி மற்றும் மதத்தின் பாகுபாடின்றி அனைவரின் ஒற்றுமையே நாட்டின் உருவாக்கத்திற்கு பங்களித்தது. எளிமையாகச் சொன்னால், அது நம் உணவில் பிரதிபலிக்கிறது – நாசி லேமாக் காலை உணவு, கொய்தியாவு மதிய உணவு, இரவு உணவிற்கு மீன் தலை கறி
64வது சுகந்திர தினத்தைக் கொண்டாடும் இந்நேரத்தில் கோவிட் -19 தொற்றுநோயால் 15,000 க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து சுகாதார நெருக்கடியில் கடுமையான சவாலை நாடு எதிர்கொண்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்காத்தான் ஹரப்பானின் வீழ்ச்சிக்குப் பிறகு நிலையற்ற அரசியல் சூழ்நிலை, மற்றும் கோவிட் -19 தொற்றுநோய்யால் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக எதிர்மறை வளர்ச்சியைக் கண்டோம்.
இது போன்ற சமயங்களில், மலேசியாகினியின் அதன் முக்கிய பங்கை ஆற்றியது. பாராளுமன்றம், கட்சி பொதுக் கூட்டங்கள், அரசியல் தலைவர்களின் நீதிமன்ற வழக்குகள் வரை தொடர்ச்சியான செய்திகளை வெளியிடுவதன் மூலம் மலேசியாகினி தனது சிறப்பையும் அடையாளத்தையும் முத்திரை பதித்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, மலேசியாகினி குரலற்றவர்களுக்கான குரலாக உறுதியாக இருக்கும். நெருக்கடியான சூல்நிலைகளிலும், ஊடகங்கள் மீது அழுத்தம் இருந்தபோதிலும், வெளிப்படைத்தன்மை மற்றும் ஊடக சுதந்திரத்தின் கொள்கைகளை அது கடைபிடிக்கும்.
அனைவருக்கும் மலேசியா சுதந்திர தின வாழ்த்துக்கள்.