மீட்பு பணிக்காக தலீபான்களுடன் கண்டிப்பாக பேச வேண்டும்; ஜெர்மனி அதிபர்

காபூல்,

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தலீபான்கள் வசம் வந்துள்ளது. தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டில் இருந்து ஏராளமானோர் வெளியேறினர். ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, அடுத்த ஒருவாரத்திற்குள் தலீபான்கள் தலைமையிலான புதிய அரசு அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீட்பு பணிகளுக்காக தலீபான்களுடன் பேச வேண்டும் என்று ஜெர்மனி அதிபர்  ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து மெர்கல் கூறுகையில், “ ஜெர்மனிக்காக பணியாற்றிய மக்களை எப்படி பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து நாம் தலீபான்களுடன் பேச வேண்டும். ஜெர்மனியின் மேம்பாட்டு  அமைப்புகளுக்காக பணியாற்றிவிட்டு தற்போது அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் மக்களை நாம் கண்டிப்பாக மீட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

(நன்றி Dailythanthi)