அபுதாபி சுகாதார சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அதன் அனைத்து சுகாதார, மருத்துவ மையங்களுக்கும் 16 வயதுக்கு மேற்பட்டோர் செல்ல கிரீன் பாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளது. இதில் தற்போது அந்த மையங்களில் அவசர சேவை பிரிவுகள் மற்றும் டிரைவ் த்ரூ பரிசோதனை வசதிகளை பெறுவது தவிர மற்ற மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு கிரீன் பாஸ் அவசியமாகும். இந்த அறிவிப்பானது நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அனைத்து அரசு மையங்களிலும் அமலுக்கு வருகிறது. எனவே 16 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி மையம் உள்ளிட்ட அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் செல்ல இந்த முறை அவசியமாகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
(நன்றி Dailythanthi)