வட கொரியாவில் குழந்தைகள் மற்றும் முதியோர் கடும் பட்டினியால் வாடக்கூடும் – ஐநா அதிகாரி எச்சரிக்கை

வட கொரியாவில் உள்ள ஐநாவின் சிறப்பு அதிகாரி ஒருவர், இதற்கு காரணம் சர்வதேச தடைகளும், கோவிட் தொற்றால் எல்லைகள் மூடப்பட்டதும் என்கிறார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க வட கொரியா தனது எல்லையை மூடியது அதுவே உணவு பஞ்சத்தை முக்கிய காரணம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

உணவு பஞ்சத்தால் வட மக்கள் மரியாதையுடன் வாழும் ஒரு வாழ்க்கையை இழந்து வருகின்றனர் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

வட கொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டதால் அந்நாட்டின் மீது பல நாடுகள் தடைகளை விதித்தன. ஆனால் தற்போதுள்ள நெருக்கடியை சமாளிக்க அந்த தடைகளை நீக்க வேண்டும் என ஐநா அதிகாரி தெரிவித்துள்ளார்.

வட கொரியா கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து தப்ப சீனாவுடனான எல்லையை மூடியதால் அந்நாட்டுடனான வணிகம் நின்று போனது. வட கொரியா சீனாவைதான் உணவு, பூச்சிக் கொல்லி மற்றும் எரிபொருளுக்காக நம்பியுள்ளது.

இந்த வாரம் நாடு மிக மோசமான நிலையை எதிர்கொண்டுவருவதாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக அரசு செய்தி முகமை தெரிவித்தது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் வட கொரியா மீது சர்வதேச நாடுகள் விதித்திருக்கும் தடையை தளர்த்துவதற்கு வழி செய்து அங்கு உயிர்காக்கும் உதவிகள் சென்று சேர வழி வகை செய்ய வேண்டும் என்றும் ஐநா அதிகாரி குவாண்டானா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தெரிவித்து வருகிறார் ஆனால் தடைகளை நீக்குவதற்கு வட கொரியா அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வட கொரியா இதனை மறுத்துள்ளது.

அடுத்தடுத்த ஏவுகணை சோதனைகள்

வட கொரியாகடந்த சில வாரங்களாக வட கொரியா ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போவதாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார்.

தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றும் அந்நாட்டு அவர் தெரிவித்துள்ளார்.

தற்காப்புக்காக மட்டுமே ஆயுதங்களைப் பெருக்குவதாகவும் போரைத் தொடங்குவது வடகொரியாவின் நோக்கம் அல்ல எனவும் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.

திங்கள்கிழமையன்று ஏவுகணைகள் உள்ளிட்டவை அடங்கிய பாதுகாப்பு கண்காட்சியைத் தொடங்கிவைத்து கிம் இவ்வாறு உரையாற்றினார்.

அமெரிக்கா விரோத மனப்பாங்குடன் செயல்படவில்லை என்பதை வட கொரியா நம்புவதற்கு நடத்தை ரீதியிலான எந்த அடிப்படையும் இல்லை என்றும் கிம் ஜோங் உன் தனது உரையில் குறிப்பிட்டார்.

தங்களது தற்காப்புக்காகவே ஆயுத வலிமையைப் பெருக்கி வருவதாக வடகொரியா தொடர்ந்து கூறி வருகிறது.

ஆனால் நாட்டை வறுமையில் தள்ளுவதற்கும் இது காரணமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

(நன்றி BBC TAMIL)