கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு- அமெரிக்க ஆய்வு முடிவு

கோவிட்-19 தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்பதை தற்போது ஆராய்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர் பாப்லோ பெனாலோஸாமெக்மாஸ்டர் கூறி உள்ளார்.

வாஷிங்டன்: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பற்றி அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழக பீன்பெர்க் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘ஜர்னல் ஆப் கிளினிக்கல் இன்வெஸ்டிகேசன்’ என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.இந்த ஆய்வில், கொரோனா வைரசுக்கு எதிரான கோவிட்-19 தடுப்பூசிகள், அதே போன்ற பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கும் என தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ்கள் என்னும்போது, அது சார்பெகோ வைரஸ் அடங்கிய சார்ஸ் கோவ்-1, சார்ஸ், சார்ஸ் கோவ்-2 ஆகிய 3 வைரஸ்களை குறிக்கிறது.

கோவிட்-19 தடுப்பூசி தற்போது கோவிட் -19 தொற்றை உருவாக்குகிற சார்ஸ்கோவ்-2 வைரசுடன் பிற வைரஸ்களையும் தடுக்கிறதாம். மேலும் சாதாரண ஜலதோஷத்தை ஏற்படுத்துகிற எச்கோவ்-ஆக்43 மற்றும் எச்கேயு-1 வைரஸ்களில் இருந்தும் கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கிறதாம். இந்த வைரஸ்களுக்கு எதிராக கோவிட்-19 தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்பதை தற்போது ஆராய்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர் பாப்லோ பெனாலோஸாமெக்மாஸ்டர் கூறி உள்ளார்.

maalaimalar