பிறந்த குழந்தை சூட்கேசில் வைத்து புதைப்பு; 24 மணி நேரம் கழித்து உயிருடன் இருந்த அதிசயம்

குழந்தையை கொல்ல முயன்றதாக லிண்டிஸ்வா மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சோமா; தென்னாப்பிரிக்காவின் சோமோ நகரை சேர்ந்தவர் லிண்டிஸ்வா நடாலோ (வயது 34). இவர்  சமீபத்தில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அவரிடம்  குழந்தை இல்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர் வீட்டுக்கு வந்த விசாரித்த போது சரியாக அவர் பதில் சொல்லவில்லை.

பின்னர் அருகில் இருந்த புற்கள் மற்றும் மணல்கள் நிறைந்த பகுதியை போலீசார் சோதனை செய்த  போது அங்கு கல்லறை போல கட்டப்பட்டு மணல் நிரப்பி இருந்தது. அதை போலீசார் தோண்டிய போது உள்ளே சூட்கேஸ் ஒன்று இருந்தது.

அதை திறந்தது பார்த்த  அதிகாரிகள் பேரதிர்ச்சி அடைந்தனர், காரணம் அதன் உள்ளே போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் ஒரு குழந்தை உயிருடன் இருப்பதைக் கண்டனர். குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டு 24 மணி நேரம் ஆகியும் அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இது குறித்த விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின. அதாவது, லிண்டிஸ்வா கர்ப்பமாக இருக்கும் போது பலமுறை கருவை கலைக்க முயன்றும் அது முடியவில்லை. இதையடுத்தே குழந்தை பிறந்தது அதை  உயிருடன் புதைத்தது தெரியவந்தது.

இந்நிலையில் குழந்தையை கொல்ல முயன்றதாக லிண்டிஸ்வா மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

dailythanthi