இஸ்லாமாபாத் : பயங்கரவாதத்துக்கு நிதி உதவி பண மோசடி தொடர்பாக ‘கிரே’ எனப்படும் மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து இடம் பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சின் பாரிசை தலைமையிடமாக வைத்து செயல்படும் எப்.ஏ.டி.எப். அமைப்பு சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்கவும் பண மோசடிகளை தடுக்கவும் அந்தந்த நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இதன் ‘கிரே’ எனப்படும் மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் கடந்த 2018-லிருந்து இடம் பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு உலக வங்கி சர்வதேச நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் நிதி உதவி கிடைக்கவில்லை.
கடந்த 2020 அக்டோபரில் எப்.ஏ.டி.எப். அமைப்பின் கூட்டம் நடந்தது. அதில் பாகிஸ்தான் முக்கிய செயல்திட்டங்களை நிறைவேற்றாததால், ‘கிரே’ நிற பட்டியலில் தொடரும்’ என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2022 ஏப்ரல் மாதம் எப்.ஏ.டி.எப்., அமைப்பின் மாநாடு துவங்க உள்ளது. இதில் பாகிஸ்தான் தனது செயல்திட்டங்களை சரிவர நிறைவேற்றவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளதால், மீண்டும் ‘கிரே’ பட்டியலில் தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
dinamalar