5,828 புதியக் கோவிட்-19 நேர்வுகள்

சுகாதார அமைச்சு இன்று 5,828 புதிய கோவிட் -19 நேர்வுகளை அறிவித்துள்ளது. ஒட்டுமொத்த நேர்வுகள் இப்போது 2,426,050.

கடந்த ஏழு நாட்களுடன் ஒப்பிடுகையில் நாடு முழுவதும் மருத்துவமனை சேர்க்கை எண்ணிக்கை 12.3 விழுக்காடு குறைந்துள்ளது.

6,630 புதிய நேர்வுகள் பதிவான நேற்றைய (அக்டோபர் 22) மாநில எண்ணிக்கை பின்வருமாறு :

சிலாங்கூர் (1,322), சரவாக் (750), சபா (641), கிளந்தான் (589), ஜொகூர் (548), பினாங்கு (440), திரெங்கானு (439), கெடா (432), பேராக் (381), கோலாலம்பூர் (322), பகாங் (302), நெகிரி செம்பிலான் (192), மலாக்கா (183), புத்ராஜெயா (44), பெர்லிஸ் (43), லாபுவான் (2).