சீனாவின் அதிநவீன போர்க்கப்பல் ; இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் தற்காப்பு – தாக்குதல் திறன் அதிகரிப்பு

அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் அதன் அனைத்து நட்பு நாடுகளின் கடற்படையை மேம்படுததும் வகையில் சீனா மிகப்பெரிய, அதிநவீன போர்க்கப்பலை பாகிஸ்தானுக்கு வழங்கி உள்ளது.

பீஜிங், சீனா தயாரித்து, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய ரகசிய செயல்பாடுகளை கொண்ட அதிநவீன போர்க்கப்பலை தயாரித்து ஒப்படைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் இரு நட்பு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது, சீனாவால் மேற்கொள்ளப்பட்ட நான்கு போர்க்கப்பல்களில் இந்த கப்பல்  முதன்மையானது. இது பாகிஸ்தான் கடற்படைக்காக கட்டப்பட்டது.

சீன ஆய்வாளர்களின் கூற்றுப்படி, வகை 054ஏ போர்க்கப்பல் “உலகத் தரம் வாய்ந்த நீருக்கடியில்  சென்று தாக்கும் திறனை” கொண்டுள்ளது. கப்பல் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் அதிக திறன் கொண்டதாகும். மேற்பரப்பில் இருந்து மற்றும் நீருக்கடியில் சென்று தாக்கும் திறனை இந்த போர்க்கப்பல் கொண்டுள்ளது. இதனை சீனா ஸ்டேட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிஎஸ்எஸ்சி) வடிவமைத்துள்ளது. ஷாங்காய் நகரில் நடந்த விழாவில் இந்த போர்க்கப்பல் பாகிஸ்தான் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

முந்தைய சீன போர் கப்பல்களுடன் ஒப்பிடுகையில், புதிய கப்பலில் மேம்பட்ட ரேடார் அமைப்பு மற்றும் அதிக அளவிலான ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருப்பதால், சிறந்த வான் பாதுகாப்பு திறன் உள்ளது” என்று சீன கடற்படை ஆராய்ச்சி அகாடமியின் மூத்த ஆராய்ச்சியாளரான ஜாங் ஜுன்ஷே கூறினார்.

சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து உருவாக்கிய ஜேஎப்-17 போர் விமானம் கடந்த ஆண்டு வெளிவந்தது. ஜேஎப்-17 பிளாக் 3 இன் வளர்ச்சி மற்றும் உற்பத்தி நடந்து வருகிறது என்று சீன சட்டமன்ற உறுப்பினரும், சீனா-பாகிஸ்தான் இணைந்து உருவாக்கிய போர் விமானத்தின் தலைமை வடிவமைப்பாளருமான யாங் வெய் தெரிவித்திருந்தார்.

முந்தைய சீன போர் கப்பல்களுடன் ஒப்பிடுகையில், புதிய கப்பலில் மேம்பட்ட ரேடார் அமைப்பு மற்றும் அதிக அளவிலான ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருப்பதால், சிறந்த வான் பாதுகாப்பு திறன் உள்ளது என சீன கடற்படை ஆராய்ச்சி அகாடமியின் மூத்த ஆராய்ச்சியாளரான ஜாங் ஜுன்ஷே கூறி உள்ளார்.

பாகிஸ்தானின் மற்றொரு நட்பு நாடான துருக்கி, கராச்சியில் நான்காவது மில்ஜெம் (MILGEM)  போர்ப்பக்கல்கள் தாயாரிக்கும்  தொழிற்சாலையை  கட்டத் தொடங்கிய சில நாட்களில் இந்த வளர்ச்சி வந்துள்ளது.

மில்ஜெம்க்கான ஒப்பந்தம் 2018 இல் இரண்டு இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே கட்டுமானம் மற்றும் விநியோகத்துடன் கூடிய தொழில்நுட்ப பரிமாற்றத்தின் முன்னோடியாக கையெழுத்தானது. சொந்தமாக போர்க்கப்பல்களை தயாரிக்கும் திறன் கொண்ட உலகின் 10 நாடுகளில் துருக்கியும் ஒன்று.

சீனா மற்றும் துருக்கியில் இருந்து தலா நான்கு போர்க்கப்பல்களை பாகிஸ்தான் பெற்றுள்ளதால், தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்தியப் பெருங்கடல் பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், அதன் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன் அதிவேகமாக உயர வாய்ப்புள்ளது.

dailythanthi