இந்திய பயணியருக்கு சிங்கப்பூரில் சலுகை

சிங்கப்பூர் : ‘இந்தியா உட்பட ஐந்து நாடுகளில் இருந்து வரும் பயணியர், தனிமைபடுத்த வேண்டியதில்லை’ என, ஆசிய நாடான சிங்கப்பூர் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு சிங்கப்பூரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதாலும், தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமடைந்துள்ளதாலும், புதிய சலுகையை சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.அதன்படி, இந்தியா, இந்தோனேஷியா உட்பட ஐந்து நாடுகளில் இருந்து வரும் பயணியர், தடுப்பூசி போட்டிருந்தால் தனிமைபடுத்த வேண்டிய அவசியமில்லை என, சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. வரும், 29ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

இதைத் தவிர, கத்தார், சவுதி அரேபியா, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளைச் சேர்ந்த பயணியருக்கு அடுத்த மாதம் முதல் இந்த சலுகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

dinamalar