மாமன்னர் தம்பதியினரின் தைப்பூச வாழ்த்துகள்

மன்னர், யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா இன்று அனைத்து இந்துக்களுக்கும் தங்களின் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இஸ்தானா நெகாராவின் முகநூல் மூலம் வெளியிடப்பட்ட அவர்களின் வாழ்த்துச் செய்தியில், இந்துக்களுக்கான இந்த மங்களகரமான நிகழ்வு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் அதே வேளையில் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு இயக்க நடைமுறைகளை (SOP) கடைபிடித்தலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.

மேலும் அந்தச்செய்தியில் , “இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டம் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களிடையே ஒற்றுமை உணர்வைத் தொடர்ந்து வளர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றும் தெரிவித்தனர்.

  • பெர்னாமா