சீனாவின் ‘குவாட்’ எதிர்ப்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் பதிலடி

மெல்பர்ன், ”இந்தோ – பசிபிக் கடற் பிராந்தியத்தின் அமைதிக்கு உருவாக்கப்பட்ட, ‘குவாட்’ அமைப்பை சாதாரணமாக கருத வேண்டாம்,” என சீனாவுக்கு நம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதிலடி தந்துள்ளார்.

இந்தோ – பசிபிக் கடற் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறலை தடுத்து, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்காக குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்புக்கு,துவக்கம் முதல் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கூட்டம்

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவில் குவாட் அமைப்பின் வெளியுறவு துறை அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இந்தோ – பசிபிக் கடற் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்புச் செயல்களை தடுக்க, குவாட் கூட்டணியை மேலும் விரிவுபடுத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்துள்ள சீனா, குவாட் அமைப்புக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தது. சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பேசும்போது, ”சீனாவின் முன்னேற்றத்தை தடுத்து அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கும் குவாட் அமைப்புக்கு எந்த நாடும் ஆதரவளிக்காது,” என்றார்.

இந்நிலையில், இது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:இந்தோ – பசிபிக் கடல் வளத்தை பாதுகாத்து, அப்பிராந்தியத்தின் அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டது. எங்கள் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக உள்ளன. குறைத்து விட முடியாதுதொடர்ந்து குவாட் அமைப்பை குறை கூறுவதன் வாயிலாக அதன் நம்பகத்தன்மையை குறைத்து விட முடியாது. இந்த அமைப்பை சாதாரணமாக கருத வேண்டாம். இது எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது உலக நாடுகளுக்குத் தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar