உக்ரைன்-ரஷ்யா போர்.. தீவிரமடையும் ராக்கெட் தாக்குதல்! இப்போது போர் நடக்கும் இடங்கள் எவை? முழு தகவல் Read more at: https://tamil.oneindia.com/news/international/ukraine-war-where-fight-is-happening-450432.html

கீவ்: உக்ரைன் நாட்டில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், ரஷ்ய ராணுவம் பல முக்கிய நகரங்களில் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் கடந்த வியாழக்கிழமை போர் தொடுத்தது. 6 நாட்களைக் கடந்தும் கூட இந்தப் போர் முடிவுக்கு வரவில்லை. இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது,

மேலும், இது தொடர்பாகக் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

தெற்கு நகர்

உக்ரைன் நாட்டில் இப்போது போர் உச்சமடைந்துள்ள நிலையில், சுமார் 75 ராணுவத்தை ரஷ்யா களமிறக்கி உள்ளது. இருப்பினும், ரஷ்ய ராணுவத்தைக் கண்டு அஞ்சாமல் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுவரை மட்டும் சுமார் 5710 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்துள்ளனர். இதனிடையே ரஷ்ய ராணுவம் இப்போது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதால் நிலைமை மோசமாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் தெற்கு நகரான கெர்சன் நகரில் சில ரஷ்யப் படைகள் உள்ளே நுழைந்துள்ளதாகவும் அங்கு உக்ரைன் படைகள் உடன் தீவிர சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கார்கிவ்

அதேபோல உக்ரைன் நகரின் 2ஆவது முக்கிய நகரான கார்கிவ் நகரிலும் ரஷ்யா ராக்கெட் தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் அப்பாவி பொதுமக்கள் 10 கொல்லப்பட்டனர். ரஷ்ய அப்பாவி மக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டி உள்ளார். அதேபோல தென்கிழக்கு உக்ரைன் நாட்டில் உள்ள மரியுபோல் நகரிலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கும் ரஷ்யா இப்போது இடைவிடாது ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. எல்லாவற்றையும் தாண்டி உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் சண்டை சில நாட்களாகவே தொடர்ந்து வருகிறது.

டிவி ஸ்டேஷன் மீது தாக்குதல்

அங்குள்ள உளவு கட்டிடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த உள்ளதாகவும் இதனால் அதன் அருகே உள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறும்படி ரஷ்ய ராணுவம் அறிவுறுத்தி இருந்தது. இந்த அறிவுறுத்தல் வந்த சற்று நேரத்திலேயே அங்குள்ள டிவி நிலையங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. அதேபோல ஓக்திர்கா என்ற நகரில் ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் 70 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர்

மரியுபோல் –

முக்கிய நகரம் இதில் மரியுபோல் நகரம் முக்கியமானதாக உள்ளது. ஏனென்றால், ரஷ்யா கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடன் இணைத்துக் கொண்ட கிரிமியா தீபகற்பத்தில் உள்ள ரஷ்ய வீரர்களுக்கும் கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இருக்கும் ஒரே பிராந்தியாம் இந்த மரியுபோல் நகரம் தான். இதைக் கைப்பற்றிவிட்டால் எளிதாக ரஷ்ய ராணுவமும் ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களும் ஒன்றாக இணைய முடியும் என்பதால் இங்குத் தீவிர சண்டை நடைபெற்று வருகிறது

OneIndia