1மலேசியாடெவலப்மென்ட் பெர்ஹாட் (1MDB) நிறுவனத்துடன் தொடர்புடைய நிதியைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மலேசியாவின் முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநரின் கணவர் தவ்பிக் அய்மான் சம்பந்தப்பட்ட விசாரணையில் உதவ, வெளிநாட்டில் இருக்கும் சாட்சிகள் மற்றும் பல ஆவணங்களை மலேசியா காவல்துறை கண்காணித்து அடையாளம் கண்டு வருகிறது.
புக்கிட் அமான் கமர்ஷியல் சிஐடி துறை இயக்குநர் முகமட் கமருடின் முகமட் டின் , போலீஸ் சம்பந்தப்பட்ட நாடுகளை தொடர்பு கொண்டதாகவும்,ஆனால், தேவையான பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
” தவ்பிக் மீதான விசாரணை ஆவணம் பூர்த்தியாகி விட்டதால் அவை , மேல் நடவடிக்கைக்காக அட்டர்னி ஜெனரல் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும், ஆனால் மேலும் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சிகளைப் பெற எங்களுக்கு உத்தரவு கிடைத்துள்ளது,” என்று அவர் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். .
கமருதீனின் கூற்றுப்படி, காவல்துறை தன்னிச்சையாகச் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பெற முடியாது, சம்பந்தப்பட்ட நாடுகளின் ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது என்கிறார்..
இதற்கு முன்பு, தவ்பிக், , தான் யாரிடமும் லஞ்சம் பெறவில்லை என்பதைத் தெளிவுபடுத்த ஒரு அறிக்கையை, Tetuan Jagjit, Ariff & Co என்ற சட்ட நிறுவனம் வழியாக வெளியிட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.
முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியாளர் டிம் லீஸ்னர், சமீபத்தில் நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தனது முன்னாள் அதிகாரி ரோஜர் இங்-க்கு எதிரான வழக்கு விசாரணையில் சாட்சி அளித்தபோது இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
பெட்ரோ சவ்டி மற்றும் 1MDB இடையே இணைந்த திட்டத்தின் ஊழலில் தவ்பீக்கின் ஈடுபாட்டை பற்றி தற்போதைய விசாரணையின் போது லெஸ்னர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) முன்னதாக 1எம்டிபி நிதியுடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் குறைந்தது ரிம65 மில்லியன் சிங்கப்பூரிலிருந்து எடுக்கப்பட்டு தவ்பிக்-கு சொந்தமான நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது.