மின்ஸ்க் :
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் பெலாரஸ் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷிய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த உரையாடலின்போது உக்ரைன் உடனான மோதல் குறித்தும், அதில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அலெக்சாண்டர் லுகாஷென்கோ, மேற்கத்திய நாடுகள்தான், ரஷியாவையும், பெலாரசையும் உக்ரைன் மீதான போருக்கு தள்ளுவதாக குற்றம் சாட்டினர்.
இது பற்றி அவர் பேசுகையில், “ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் அவர்கள் எங்களை உக்ரைனில் போருக்குத் தள்ளுகிறார்கள். இந்த மோதலில் பெலாரஸ் தலையிட்டால் அது, அவர்களுக்கு பரிசாக இருக்கும்” என கூறினார்.
Malaimalar