ஹலீம் தலைவர் இல்லையாம் – எம்.டி.யு.சி

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஊடகங்களிடம்  ஹலீம் மன்சோரிடம் இருந்து அறிக்கைகளை பெற வேண்டாம், ஏனெனில் அவர் “தலைவர் இல்லை” என்று வலியுறுத்தியுள்ளது.

நேற்று ஒரு அறிக்கையில், எம்டியுசியின் சார்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட ஹலீமுக்கு உரிமை இல்லை என்று கூறியுள்ளது.

எம்டியுசி பொதுச்செயலாளர் கமருல் பஹாரின் மன்சோர் கூறுகையில், “ஊடகங்களுக்கு எந்த கருத்துகளையும் அறிக்கைகளையும் வழங்குவதில் எம்டியுசிய  பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதி அல்லது உரிமை ஹலிமுக்கு இல்லை” என்றார்.

எம்டியுசி ஹலீம் தலைவர் என்று கூறிக்கொண்டு ஊடகங்களுக்கு தொடர்ந்து அறிக்கைகளை வழங்கினால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

ஞாயிற்றுக்கிழமை, பதவிக்கு போட்டியிட்ட ஜாபர் மஜித் போட்டியிலிருந்து விலகிய போதிலும், ஹலீமை தலைவராக  அங்கீகரிக்கவில்லை என்று காங்கிரஸ் கூறியது.

எம்டியுசி பொதுக்குழு துணைத் தலைவர் எஃபெண்டி அப்துல் கானி தற்காலிக செயல் தலைவராக இருப்பதாகக அவர் கூறினார்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் மூன்று ஆண்டு பிரதிநிதிகள் மாநாட்டில், அடுத்த எம்டியுசி தேர்தல் வரை தற்போதைய நிலையைப் பராமரிக்க கவுன்சில் முடிவு செய்ததாகக கமருல் பத்திரியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தனது தகுதியான பதவி மறுக்கப்பட்டதில் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாகவும், கவுன்சலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவர் ஆலோசித்து வருவதாகவும் ஹலீம்  பத்திரிகையிடம் கூறினார்.

“மத்தியக் குழுவின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நான் பரிசீலிப்பேன்.”

“இது எம்டியுசியின் அரசியலமைப்பை விட மிக உயர்ந்தது போல் செயல்படுகிறது. அரசியல் சாசனத்தில் தற்காலிக  தலைவர் பதவிக்கு எந்த இடமும் இல்லை,” என்கிறார் அவர் .

நாட்டிலுள்ள தொழிற்சங்கங்களின் ஒருருங்கிணைந்த  அமைப்பான எம்டியுசியின் தலைவர் பதவிக்கான 30 மாத மோதலுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தனது முதல் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

-freemalaysiatoday