ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது – செர்பிய உள்துறை மந்திரி

உக்ரைன் மீது ரஷியா 27வது நாளாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ரஷியா போரை நிறுத்தவில்லை. உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போடும் வரை போரை நிறுத்தமாட்டோம் என ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் எந்தப் பயனும் இல்லை. இதற்கிடையே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள் என பல்வேறு நாடுகளை கொண்ட அமைப்புகளும் ரஷியாவுக்கு எதிராக உள்ளது.

இந்நிலையில், ரஷியா நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க முடியாது  என செர்பிய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செர்பியாவின் உள்துறை மந்திரி அலெக்சாண்டர் வுலின் கூறுகையில், ரஷிய குடிமக்களின் சொத்துக்கள் மற்றும் ரஷிய கூட்டமைப்பின் சொத்துக்கள் திருடப்படும் ரஷிய எதிர்ப்பு வெறியின் ஒரு பகுதியாக செர்பியா ஒருபோதும் இருக்காது. அதேபோல், நாங்கள் ரஷிய ஊடகங்களை தடை செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

 

Malaimalar