ரோஸ்மாவின் ரிம 9.7 கோடி வைர நெக்லஸ்!

முன்னாள்  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் சுமார் 10 கோடி ரிங்கிட் மதிப்புள்ள இளஞ்சிவப்பு வைர நெக்லஸ் தொடர்பான விவகாரம் மீண்டும் தலை தூக்கியது.

1MDB நிதியில் லஞ்சம் மற்றும் பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியாளர் ரோஜர் என்ஜி இப்போது அமெரிக்காவில் நடக்கும் ஒரு வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக இருக்கிறார். அவரது விசாரணையின் இந்த வைரத்தின் கதையும் வெளிவந்தது.

புகழ்பெற்ற நியூயார்க் நகைக்கடை வியாபாரி லோரெய்ன் ஸ்வார்ட்ஸ் (Lorraine Schwartz), அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், ரோஸ்மா மன்சருக்கு 22 காரட் வைர நெக்லஸை விற்க 23 மில்லியன்  அமெரிக்க டாலர் (RM 97 மில்லியன்) ஒப்பந்தம் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

ஸ்வார்ட்ஸ் வழங்கிய ஆதாரத்தின் படி வைர நெக்லஸ் ரோஸ்மாவால் வாங்கப்பட்டது.

ஆனால். இதற்கு முன்பு இந்த வைர நெக்லஸை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷேக் மன்சூர் சயீட்தின் பரிசாகக் கொடுத்தார் என்று, 2018-இல் நஜிப் ரசாக்  கூறியதற்கு முரணானதாக இருக்கிறது.

மொனாக்கோ கடற்கரையில், ஒரு உல்லாச படகில், ‘தொழிலதிபர்’ லோ டேக் ஜோ உடன் இருந்த ரோஸ்மாவுக்கு தனிப்பட்ட முறையில்  நெக்லஸை வழங்கியதாக ஸ்வார்ட்ஸ் சாட்சியளித்தார்.

இந்த நெக்லஸ் பணத்தில் ஒரு தமிழ்ப்பள்ளிக்கு ரிம 200,000 வீதம் 500 பள்ளிகளுக்கு வழங்கலாம்!