ஒமைக்ரானின் பி.ஏ.2 மாறுபாடு ஆதிக்கம்: அமெரிக்காவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பல நாடுகளில் பரவியது.

மிகவும் பரவும் தன்மை கொண்ட இந்த வைரசால் உலகளவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அமெரிக்காவிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவியது.

இதற்கிடயே ஒமைக்ரானின் துணை வகைகளாக பி.ஏ.1 மற்றும் பி.ஏ.2 வைரஸ்களும் பரவியது. இதில் பெரும்பாலான நாடுகளில் பி.ஏ.1 வகை வைரஸ் காணப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஒமைக்ரானின் புதிய மாறுபாடான பி.ஏ.2 வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் ஒமைக்ரானின் பி.ஏ.2 வைரஸ் வேகமாக பரவுகிறது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டபோது தினசரி பாதிப்பு 8 லட்சமாக இருந்தது. சில வாரங்களில் வைரஸ் பாதிப்பு குறைந்தது. தற்போது தினசரி பாதிப்பு 3 ஆயிரமாக உள்ள நிலையில் பி.ஏ.2 வைரஸ் காரணமாக அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளில் 35 சதவீதம் பேர் ஒமைக்ரானின் பி.ஏ.2 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய மாறுபாடு காரணமாக அமெரிக்காவின் சில பகுதிகளில் தொற்று நோய் பாதிப்பு அதிகரித்து உள்ளது என்றும் கூறி உள்ளனர். அதே வேளையில் பி.ஏ.2 மாறுபாடு தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளது.

பி.ஏ.2 மாறுபாடு அசல் ஒமைக்ரானைவிட மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது. ஆனால் அது நோய் எதிர்ப்பு பாதுகாப்பை தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Malaimalar