இஸ்ரேல் அரபு பயங்கரவாத அலையில் சிக்கியுள்ளது – பிரதமர் நப்தாலி பென்னட் வேதனை

இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் அரபு  பயங்கரவாத அலையில் சிக்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்ய அவசர கூட்டம் கூட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் ஒரே வாரத்தில் தொடர்ந்து 3 பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ள நிலையில் பிரதமர் நப்தாலி பென்னட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Malaimalar