உலகளவில் எரிவாயு, உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு புதின்தான் காரணம்- ஜோ பைடன் குற்றச்சாட்டு

உக்ரைன்- ரஷியா இடையே இன்று 38வது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் உலகளவில் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்றும் இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்தான் காரணம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஜோ பைடன் கூறியதாவது:-

உக்ரைனில் புதினின் படையெடுப்பினால், உலகம் முழுவதும் எரிவாயு விலை மற்றும் உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது.  அதை சமாளிக்க உதவுவதற்காக எங்களின் பெட்ரோலிய இருப்புகளில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்களை அனுப்புவதற்கு அங்கீகரித்துள்ளேன்.

தனது நடவடிக்கையின் மூலம் பெட்ரோல் விலை எவ்வளவு குறையும் என்று தெரியவில்லை. ஆனால் அது ஒரு கேலன் 10 சென்ட் முதல் 35 காசுகள் வரை ஏதேனும் இருக்கலாம்.

எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என்றால் அதிக எண்ணெய் விநியோகம் இருக்க வேண்டும். இது உலகத்திற்கான விளைவு மட்டுமல்ல ஆபத்தின் தருணம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

Malaimalar