22 பிரதமர்களை கண்ட பாகிஸ்தான் – யாரும் முழுமையாக 5 ஆண்டை நிறைவு செய்யாத அவலம்

இந்தியாவுடன் சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான் இதுவரையில் 22 பிரதமர்களை கண்டிருக்கிறது.

1947-ம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தபோது லியாகத் அலிகான் பிரதமராக பதவி ஏற்றார். அவர் ராவல்பிண்டியில் 1951, அக்டோபர் 16-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இவரை தொடர்ந்து, ஹுசைன் சஹீத் சுரதியும் 4 ஆண்டு 2 மாதங்கள் ஆட்சியில் இருந்தார்.

1971-ல் பாகிஸ்தானின் 8-வது பிரதமராக பதவியேற்ற நூருல் அமின் 13 நாட்களே அந்த பதவியில் இருந்தார். பாகிஸ்தானில் குறைந்த நாட்கள் பிரதமராக இருந்தவர் இவரே.

1973, ஆகஸ்டில் பிரதமரான ஜூல்பிகர் அலி பூட்டோ பிரதமராக 4 வருடங்களை நிறைவு செய்யவிருந்த நிலையில் மீண்டும் ஆட்சி ராணுவத்தின் வசமானது.

பெனாசிர் பூட்டோ, நவாஸ் செரீப் என யாரும் 5 ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை.

கடந்த 2018-ல் பாகிஸ்தானை வளர்ச்சியடைய செய்வேன் என்ற வரிந்து கட்டிக்கொண்டு பிரதமர் பதவிக்குவந்த இம்ரான் கானும், இப்போது 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்ய முடியாமல் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தான் பிரதமர் அரியணையில் 3 ஆண்டுகள், 223 நாட்கள் அமர்ந்திருக்கிறார்.

 

 

Malaimalar