உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இன்று காணொலியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
ரஷ்ய துருப்புக்கள் செய்த அட்டூழியங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து வேறுபட்டவை அல்ல. கிரெம்ளின் படைகளை போர் குற்றங்களுக்காக நீதியின் முன் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டிற்கு சேவை செய்யும் யாவரையும் தேடி வேண்டுமென்றே கொன்றது.
ரஷிய வீரர்கள் உக்ரேனியர்களின் கைகால்களை வெட்டி, தொண்டையை வெட்டினர். குழந்தைகள் முன்னிலையில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
புச்சாவில் கண்டுபிடிக்கப்பட்ட இறந்த பொதுமக்களின் படங்களை இப்போது உலகம் காண்கிறது. இது உதாரணத்துக்காக காண்பிக்கப்பட்ட ஒரு சில படங்கள் தான்.
இது உலகின் முக்கிய நிறுவனம் என்பது வெளிப்படையானது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால், உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு எங்கே போனது? அது இங்கே இல்லை.
உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களுக்காக ரஷ்ய ராணுவமும் அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தவர்களும் உடனடியாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
Malaimalar