மலாய்க்காரர்கள் தங்களின் பூர்வ அடிமை பின்னணித்துவ சிந்தனையின் தாக்கத்தில் இருப்பதால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு தேவை என்பது குப்பைக்கு ஈடானதாகும் என்கிறார் மூடா தலைவர் சையட் சாடிக் சையத் அப்துல் ரகுமான் நிராகரித்துள்ளார்.
மலாய்க்காரர்களைப் பாதுகாப்பதாகக் கூறும் அரசியல்வாதிகள் உண்மையில் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை, அதே நேரத்தில் ஆடம்பரமாக வாழ்கின்றனர் என்றும் சையத் சாடிக் கூறினார்.
“600,000 எம்-40 குடும்பங்கள் பி-40 குழுவிற்குச் சரிந்தபோது, மலாய்க்காரர்கள் பாதுகாக்கப்பட்டார்களா?”
“கோவிட் -19 தொற்றுநோய்களின் போது போதுமான உணவு இல்லாததால் மலேசியர்கள் வெள்ளைக் கொடிகளை அசைக்க வேண்டியிருந்தபோது, மலாய்க்காரர்கள் பசி மற்றும் நோயிலிருந்து பாதுகாக்கப்பட்டார்களா?”
லட்சக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பர கைக்கடிகாரங்கள், அரண்மனைகள் மற்றும் குழந்தைகளுக்கான சொகுசு கார்களை வைத்திருக்கும் மலாய் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை முறையை மக்கள் பார்க்கும்போது, சாதரண மலாய்க்காரர்கள் அத்தகைய ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா?” என்று முகநூலில் இன்று அந்த மூவார் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
மலாய்க்காரர்களுக்கு ஒரு பாதுகாக்கா (அரசியல்வாதிகள்) தேவை என்று நேற்று முந்தினம் கூறிய பெர்சத்து இளைஞர் தலைவர் வான் அஹ்மத் ஃபைசல் வான் அகமது கமலுக்கு(Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal), சையட் சாடிக் ( மேலே, இடது ) பதிலளித்தார்.
மலேசியாவில் அடையாள அரசியல் இன்னும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்றும், மூடா போன்ற “மத்திய-இடது” கட்சிகளின் பிரச்சினை இதுதான் இந்த நிலையை குறைத்து மதிப்பிடுகிறது என்று அந்த தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் கூறினார்.
மூடா போன்ற அனைவரயும் அரவணைக்கும் கட்சிகளில் இருந்து மலேசியர்களை பயமுறுத்தி பிளவுபடுத்த விரும்புபவர்களின் வழக்கமான தந்திரம் இது என்று சையட் சாடிக் கூறினார்.
அரசியல்வாதிகள் பழங்கால இன அரசியலைக் கடந்து செல்ல வேண்டும், இது மேட்டுக்குடியினர், அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு மட்டுமே பயனளிக்கிறது என்றார்.
“முவாரில், அம்னோ, மூடா அல்லது பாஸ் போன்ற கட்சிகளை ஆதரிப்பவர்களை மலாய், சீன அல்லது இந்திய குடும்பங்கள் என பாகுபாடு பார்த்து உதவ வில்லை”.
“அதேபோல் தேசிய அளவில், மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சபா மற்றும் சரவாக், பெர்லிஸ், ஜொகூர், கிளந்தான், பகாங் – அனைவருக்கும் உதவ வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” இது மூடாவின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.