ஹாங்காங்கில் கொரோனா பயங்கரம்!- 24 மணி நேரமும் இயங்கும் சுடுகாடுகள்- நோயாளிகள் அருகிலேயே அடுக்கப்படும் உடல்கள்

ஹாங்காங்கில் பாரம்பரிய மர சவப்பெட்டிகள் குறைவாக இருக்கின்றன. கோவிட்-19 ஹாங்காங்கை உலுக்கி வருகிறது. சவக்கிடங்குகளில் இடப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதனால் ஈமச்சடங்கு செய்யும் மயானங்களிலும் கல்லறைகளிலும் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.

“இவ்வளவு உடல்கள் ஒன்றாக குவிந்து கிடப்பதை நான் பார்த்ததில்லை,” என்று 37 வயதான இறுதிச்சடங்கு இயக்குனர் லோக் சுங் கூறினார், அவர் மார்ச் மாதத்தில் சுமார் 40 இறுதிச் சடங்குகளை நடத்தினார். இது சராசரியாக மாதம் ஒன்றிற்கு 15 ஆக மட்டுமே இருந்தது. “குடும்ப உறுப்பினர்களை இவ்வளவு வருத்தமாகவும், ஏமாற்றமாகவும், மிகவும் உதவியற்றவர்களாகவும் நான் பார்த்ததில்லை,” என்கிறார் சுங்.

கொரோனா வைரஸின் ஐந்தாவது அலை இந்த ஆண்டு ஹாங்காங்கைத் தாக்கியதிலிருந்து, ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொற்றுகளும் 8,000 க்கும் மேற்பட்ட இறப்புகளும் ஏற்பட்டுள்ளது.

பிணவறைகளில் உள்ள இடங்கள் நிரம்பியதால், நோயாளிகளின் அருகில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள காட்சிகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. உடல்களைப் பெறுவதற்கான ஆவணங்களைப் பெற தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது.

மார்ச் 1 அன்று இறந்த ஒரு பெண்ணின் குடும்பத்தினர் அவரது உடலைக் கோருவதற்கு இன்னும் ஆவணங்களுக்காகக் காத்திருந்தனர், அவர் மேலும் கூறினார்.

அண்டை நாடான தெற்கு சீன நகரமான ஷென்செனிலிருந்து பொருட்கள் வருவதில் போக்குவரத்தில் ஏற்பட்ட லாக்ஜாம் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போத ஷென்சென் அதன் சொந்த COVID-19 பரவலை எதிர்த்துப் போராடுகிறது.

இறுதிச் சடங்கு நிலைய ஊழியர்களையும் கோவிட் தொற்றியுள்ளதும் ஈமச்சடங்குகளை தாமதம் ஆக்கியுள்ளதால் உறவினர்கள் பிணங்களுடன் காத்திருக்க நேரிடும் அவலமும் அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஹாங்காங்கிற்கு ஒவ்வொரு நாளும் தேவைப்படும் 250 முதல் 300 சவப்பெட்டிகளில் 95% க்கும் அதிகமானவற்றை சீனா வழங்குகிறது என்று நகர உணவு மற்றும் சுகாதார அதிகாரி ஐரீன் யங் கூறினார்.

ஆறு சுடுகாடுகள் இப்போது கிட்டத்தட்ட 24 மணி நேரமும் இயங்குகின்றன, ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 300 தகனங்களைச் செய்கின்றன அல்லது வழக்கமான எண்ணிக்கையை விட இரட்டிப்பாகவும் சில சமயங்களில் 600 உடல்கள் வரை எரிக்கப்படுகின்றன. மேலும் பொது சவக்கிடங்குகள் 4,600 உடல்களுக்கு இடமளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன, முன்பு 1350 உடல்களைத்தான் வைக்க முடியும்.

சீனாவிலும் கொரோனா தலைவிரித்தாட, ஹாங்காங்கில் ஓய மறுக்கிறது கொரோனா பாதிப்புகள்!

 

 

News18