இந்தோனேசியா தனது குடிமக்களை மலேசியாவின் முறையான துறையில் பணிபுரிய அனுப்புவதில் கவனம் செலுத்தும், துஷ்பிரயோகம் மற்றும் கட்டாய உழைப்பால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வீட்டுப் பணியாளர்களை படிப்படியாக நிறுத்தும் என்று அதன் தூதுவர் கூறினார்.
தொழிலாளர்களை மோசமாக நடத்தும் நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அனுப்புவதில் தனது நாடு ஆர்வம் காட்டவில்லை என்றார் மலேசியாவுக்கான இந்தோனேசிய தூதர் ஹெர்மோனோ(Hermono),
இரு நாடுகளும் ஏப்ரல் 1 ஆம் தேதி கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MOU) மலேசியாகினி பார்வையிட்டது. அதன் காலாவதி தேதி அல்லது நடைமுறைப்படுத்தக்கூடிய காலத்தை குறிப்பிடவில்லை.
எவ்வாறாயினும், ஹெர்மோனோ கூறுகையில், “உலகெங்கிலும் வீட்டு வேலையாட்களாக பணிபுரியும் இந்தோனேசியர்களை படிப்படியாக அங்கிருந்து வெளியேற்ற உள்ளோம்”, என்றார்.
“இது எங்கள் தேசிய புலம்பெயர்ந்த தொழிலாளர் கொள்கையின் ஒரு பகுதியாகும், இது 2017 க்குள் வீட்டு வேலையாட்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக அடைவதை நோக்கமாகக் கொண்டது, ஆனால் அந்த நோக்கம் ஈடேறவில்லை”.
எங்கள் தொழிலாளர்கள் அதிக உரிமை அத்து மீறல்களை கொண்ட நாடுகளில் இருந்து முதலில் நாங்கள் அவர்களை வெளியேற்றுவோம்.
“உதாரணமாக, 2015 இல் 18 மத்திய கிழக்கு நாடுகளில் வேலை தேடும் எங்கள் வீட்டுப் பணியாளர்களுக்கு நாங்கள் தடை விதித்தோம்,” என்று அவர் விளக்கினார்.
மலேசியா எப்படி தனது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடத்துகிறது என்பது ஏற்கனவே சர்வதேச ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.
‘மலேசியாவில் இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு’ குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அதில் உள்ள விதிகளை அமல்படுத்துவதில் மலேசியாவின் கடப்பாடு கணிக்கப்படும்’ என்றார்.
எவ்வாறாயினும், இந்த மாத தொடக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தோனேசியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான உறவில் ஒரு முக்கிய நிகழ்வாகும்,
“இது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசியாவின் கடப்பாட்டையும் மற்றும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார்.
இந்தோனேசியா தங்கள் வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் ஆர்வமுள்ள மற்ற நாடுகளுடன் மேற்கொள்ளும் இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு இந்த குறிப்பாணை ஒரு அளவுகோலாக இருக்கும் என்றார்.
“அவை குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் புருனே”.
“உள்ளூர் சட்டங்கள் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளை போதுமான அளவு பாதுகாக்காத நாடுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்”
“மேலும் மலேசியா-இந்தோனேசியா புரிந்துணர்வு ஒப்பந்தம், வேறொரு நாட்டுடன் நாங்கள் வெற்றிகரமாக மேற்கொண்ட மிகவும் முற்போக்கான வீட்டுப் பணியாளர் உரிமை ஆவணமாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.
தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடக்கியதாக ஹெர்மோனோ கூறினார்.
ஏப்ரல் 7 ம் திகதி, இந்தோனேசிய உள்நாட்டு தொழிலாளர்கள் ஊதியங்கள் RM1,500 க்கும் குறைவாக இருப்பதாகவும், தொழிலாளர்கள் தங்கள் ஒப்பந்தங்களை முறித்துக் கொள்ளும் தொழிலாளர்களின் ஊதியத்தை தொடர்ந்து செலுத்துவதில்லை என்றார்.
இதற்கு எதிர்வினையாக, மலேசிய பணிப்பெண் முதலாளிகள் சங்கத்தின் தலைவர் எங்கு அஹ்மத் பௌசி எங்கு முஹ்சீன்(Ahmad Fauzi Engku Muhsein), இந்த நிலமையில், பலர் பணிபெண்களை அமர்த்தும் சூழலில் இல்லை, தாக்கு பிடிக்க முடியாது, மலிவான மாற்றீடுகளைப் பார்க்கத் தொடங்கலாம் என்று புலம்பினர்.
முறைகேடுகள் முடிவுக்கு வர வேண்டும்
ஹெர்மோனோ, பேச்சுவார்த்தைகளின் போது, இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பொதுவான துஷ்பிரயோகம் மற்றும் கட்டாய உழைப்பு கூறுகள் குறித்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று இந்தோனேசியா கேட்டுக் கொண்டது.
மலேசியாவில் புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் குறைவான சம்பளத்தை எதிர்கொண்டனர், நீண்ட நேரம் ஓய்வின்றி உழைத்தனர், ஊதிய அதிகரிப்பு பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டன, சில 10 முதல் 15 ஆண்டுகள் வரை கூட நீடித்தன.
“புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள விதிகள் ஒழுக்கமான பணி வழிகாட்டுதல்கள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரநிலைகளை பிரதிபலிக்கின்றன”.
One-Channel-System முதலாளிகளையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கிறது என்று ஹெர்மோனோ சுட்டிக்காட்டினார், ஆனால் மலேசிய முதலாளிகளுக்கு இந்த ஏற்பாடுகள் புதியவை என்பதையும் புரிந்துகொண்டதாக கூறினார்.
“முதலாளிகளிடமிருந்து இந்தோனேசியா அதிகமாகக் கேட்கிறது என்பதை விட அது முதலாளிகளிடமிருந்து தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது”.
“நாங்கள் எங்கள் தொழிலாளர்கள் வேறொரு நாட்டில் அடிமைகளாக நடத்தப்படிவதை அனுமதிக்க முடியாது.” என்றார்.