அணு ஆயுத பாதுகாப்பு குறித்த இம்ரான் கான் குற்றச்சாட்டை நிராகரித்தது பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதன் மூலம் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.

இந்நிலையில், பெஷாவர் நகரில் நடைபெற்ற பொதுகூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், புதிதாக தேர்ந்தெடுக்க ஷபாஸ் ஷெரீப் அரசை கொள்ளையர்கள் மற்றும் திருடர்கள் என்று விமர்சனம் செய்திருந்தார். அவர்கள் கைகளில் நாட்டின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக உள்ளதா என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அணு ஆயுத பாதுகாப்பு குறித்த இம்ரான் கான் கருத்தை பாகிஸ்தான் ராணுவம் நிராகரித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு இயக்குநர் ஜெனரல் பாபர் இப்திகார், எங்கள் அணுசக்தி திட்டத்திற்கு இதுபோன்ற அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணு ஆயுத சொத்து பாதுகாப்பு சர்வதேச மதிப்பீட்டில் சிறந்த ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

 

Malaimalar