உக்ரைன் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த 900க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுப்பு

உக்ரைன் மீதான ரஷியா தொடுத்துள்ள போர் 52வது நாளாக நீடிக்கும் நிலையில்,  உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 900க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதிகளை விட்டு ரஷிய படைகள் வெளியேறிய நிலையில்,  உடல்கள் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாகவும்,  பெரும்பாலான உடல்களில் குண்டு காயங்கள் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சிலர் தூக்கிலிட்டப்பதற்கான அடையாளங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர். தெருக்களில் கைவிடப்பட்ட நிலையிலும், தற்காலிகமாக புதைக்கப்பட்ட நிலையிலும் உடல்கள் கிடந்தாகவும், ஒவ்வொரு நாளும் அதிகமான உடல்கள், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டு வருவதாகவும் கீவ் பிராந்திய பகுதி காவல்துறை தலைவர் ஆண்ட்ரி நெபிடோவ் தெரிவித்துள்ளார்.

 

Malaimalar