ரஷியா 25 சதவீத படைகளை இழந்துவிட்டது: அமெரிக்கா தகவல்

ரஷியா உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த 55 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த போரில் உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வரும் ரஷியா, தற்போது அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான மரியுபோல் நகரத்தை முற்றுகையிட்டுள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷிய அணி வகுப்புகள், ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடம் மரியுபோலை சுற்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உக்ரைன் படைகள் இன்று சரணடையாவிட்டால் விளைவு வேறு விதமாக இருக்கும் என ரஷியா எச்சரித்துள்ளது. அதே சமயம், உக்ரைன் படைகள் தங்களுக்கு உதவ புதிய படைகளை அனுப்பும்படி அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.

அதேசமயம் இந்த போரில் ரஷியா தனது 25 சதவீத படைகளை இழந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷியாவின் பலம் குறைந்து வருகிறது. இந்த சமயத்தில் உக்ரைனுக்கு நாங்கள் ஆயுத தளவாடங்களை உதவிக்கு அனுப்புவோம் என கூறியுள்ளது.

 

 

Malaimalar