மனநலம் குன்றிய நாகேந்திரன் தூக்கிலிடப்பட்டது, ஒரு காட்டுமிராண்டித்தனம்

மலேசியாவைச் சேர்ந்த நாகேந்திரன் கே தர்மலிங்கம் சிங்கப்பூரால் தூக்கிலிடப்பட்டதாக அவரது சகோதரர் நவின்குமார் தெரிவித்துள்ளார்.

இது ஒரு ஒட்டுமொத்த மனித தன்மையற்ற செயல் என்று சுவராம் மனித உரிமை இயக்கத்தின் நிருவாகி சிவன் துரைசாமி சாடினார். “நாகேந்திரனின் இறப்பு ஒரு அத்தியாவசியமற்ற ஒன்று, ஒரு மனநிலை குன்றியவரை மரண தண்டனைக்கு உட்படுத்திவது காட்டு மிராண்டி தனமாகும்” , என்றார்.

இன்று காலை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதையும், நாகேந்திரனின் இறுதிச் சடங்கு ஈப்போவில் நடைபெறும் என்பதையும் நவீன் உறுதிப்படுத்தியதாக பத்திரிக்கைகள் வெளியிட்டது.

போதைப்பொருள் கடத்தலுக்காக அவரது மரண தண்டனையை நகர-மாநில மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு இது நடந்துள்ளது.

நாகேந்திரனின் தாயார் தனது மகனின் தண்டனை மற்றும் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நேற்று தாக்கல் செய்த சட்டப்பூர்வ சவாலை ,சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதில் அடிப்படை சட்டரீதியான சவாலின் சாரம் என்னவென்றாரால் நாகேந்திரனின் மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்த நீதிபதி  சுந்தரேஷ் மேனன், முன்னதாக நாகேந்திரன் மீது வழக்குத் தொடுத்து அவருக்குத் தண்டனை வழங்கிய தலைமை நீதிபதியாக இருந்தார் என்பதுதான்.

அவரது தாயாரின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, நாகேந்திரன், 34, நீதிமன்ற அறையில் இருந்து அவரது குடும்ப உறுப்பினர்களுடன் கைகோர்க்க நீதிமன்றம் அனுமதித்தது.

பேராக்கைச் சேர்ந்த நாகேந்திரன் IQ 69-ஐக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது – இது  மனநலம் குன்றியதாக  அங்கீகரிக்கப்பட்டது. சிங்கப்பூரில் 2010 ஆம் ஆண்டு முதல் 42.7 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்தியதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் நவம்பர் 10, 2021 அன்று தூக்கிலிடப்படவிருந்தார், ஆனால் நவம்பர் 9 அன்று அவர் தனது மரண தண்டனைக்கு எதிரான கடைசி வழக்குக்காக ஆஜரானபோது கோவிட் -19 க்கு பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு தற்காலிக விடுப்பு  கிடைத்தது.

நாகேந்திரனின் வழக்கு சர்வதேச கவனத்தை ஈர்த்தது, பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் நடிகர் ஸ்டீபன் ஃப்ரை ஆகியோர் சிங்கப்பூரை அவரது உயிரைக் காப்பாற்றுமாறு வலியுறுத்தினர்.

நவம்பர் 7, 2021 அன்று, பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தனது சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கு இந்த வழக்கில் மன்னிப்புக் கோரி கடிதம் எழுதியதாகத் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 3 ஆம் தேதி, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், நாகேந்திரனுக்கு சட்டத்தின் கீழ் உரிய நடைமுறை அளிக்கப்பட்டது என்று கூறினார்.