ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் இதுவரை அந்நாட்டில் 13 முறை கண்டறியப்பட்டு உள்ளது. இதில் கடந்த 2018-2020-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பரவிலின் போது அதிகபட்சமாக 2,300 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் காங்கோ நாட்டில் வரமேற்கு பகுதியில் தற்போது மீண்டும் எபோலோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என தேசிய உயிரி மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து காங்கோவின் அண்டை நாடான தான்சானியாவின் சுகாதார அதிகாரிகள் அதிக கண்காணிப்புடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கோ எல்லையை ஒட்டிய பகுதிகளில் கண்காணிப்பு பணிக்கான நிபுணர்கள் அடங்கிய பல குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என அந்நாட்டு சுகாதார துறை நிரந்தர செயலாளர் ஆபெல் மகுபி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,
அண்டை நாடான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் எபோலா பரவலை பற்றி அறிந்து நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அரசு இந்த விசயத்தில் பணியாற்றி வரும் சூழலில் மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Malaimalar