பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர் கொண்டு வருகிறது.
இந்த நிலையில் நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக அந்த நாட்டுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19,372 கோடி) கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது. இதில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.11,618 கோடி) இந்த ஆண்டிலேயே வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முடிவு செய்துள்ளது.
மேற்கூறிய இந்த தகவலை பாகிஸ்தான் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Malaimalar