அரச விசாரணை ஆணைய தீர்ப்பு செல்லாது, தியோ குடும்பம் கோருகிறது

அரசியல் உதவியாளரான தியோ பெங் ஹாக் தற்கொலை செய்து கொண்டார் என அரச விசாரணை ஆணையம் வழங்கிய முடிவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் நீதித்துறை மறு ஆய்வுக்கான விண்ணப்பத்தை தியோ குடும்பத்தினர் சமர்பித்துள்ளனர்.

தியோவின் சகோதரரான தெஓ மெங் கீ கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அந்த விண்ணப்பத்தை இன்று

சமர்பித்தார். அதில் அரச விசாரணை ஆணைய உறுப்பினர்களான ஜேம்ஸ் பூங், அப்துல் காதிர் சுலைமான், டி செல்வேந்திரநாதன், டாக்டர் பூபிந்தர் சிங், டாக்டர் முகமட் ஹாட்டா ஷாரோம் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

“அந்த அறிக்கையை வாசித்த பின்னர் 2009ம் ஆண்டு ஜுலை மாதம் 16ம் தேதி காலை மணி 3.30க்கும் 7க்கும் இடையில் தியோ பெங் ஹாக்கிற்கு என்ன நிகழ்ந்தது என்பது பிரதிவாதிகளுக்குத் தெரியாது என்பதை நான் தெளிவாக எடுத்துக் கூற விரும்புகிறேன்,” என தியோ மெங் கீ தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய தினம் அதிகாலையில் தியோ பெங் ஹாக்-கிடம் “நான்காவது விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடத்தியதாக அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது.

அந்த கால கட்டத்தில் தியோ பெங் ஹாக் எல்லைக்குத் தள்ளப்பட்டார் என்றும் அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் ஆணையம் முடிவு செய்தது.

“ஊகங்கள் அடிப்படையில் தற்கொலை என முடிவு செய்யக் கூடாது என நான் எனது வழக்குரைஞரின் ஆலோசனை கூறியது போலக் கருதுகிறேன். அதற்கு தக்க ஆதாரங்கல் இருக்க வேண்டும்,” என தியோ மெங் கீ குறிப்பிட்டார்.

அவருடன் குடும்ப உறுப்பினர்கள் வழக்குரைஞர்களான கர்பால் சிங்கும் கோபிந்த் சிங் டியோவும் சென்றிருந்தனர்.

“எம்எசிசி அதிகாரிகள் நடத்திய மூர்க்கத்தனமான, இடைவிடாத, ஈவிரக்கமற்ற, ஒடுக்குமுறையான விசாரணையால்” தியோ “தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்” என அரச விசாரணை ஆணைய அறிக்கை குறிப்பிட்டது. தியோ மரணத்துக்குப் பொறுப்பு என அது மூவரைப் பெயர் குறிப்பிட்டது.