மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கிய நிலையில் ரஷ்ய இராணுவத்திடம் சரணடந்த உக்ரைனிய இராணுவ வீரர்களில் 900 பேரை ரஷ்யாவின் சிறைக் கொலனிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ரஷ்ய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரும்பு ஆலையில் இருந்து வெளியேறி ரஷ்ய இராணுவத்திடம் சரணடைந்த 959 உக்ரைனிய இராணுவ வீரர்களில் 51 பேர் அவர்களது படுகாயம் காரணமாக மருத்துவமனைக்கும், மீதமுள்ள 908 உக்ரைனிய இராணுவ வீரர்கள் ரஷ்ய இராணுவத்தின் கட்டுபாட்டில் இருக்கும் ஒலெனிவ்கா( Olenivka) நகரின் சிறைக் கொலனிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சிறைக் கொலனிகளுக்கு அனுப்பட்டுள்ள உக்ரைனிய இராணுவ வீரர்கள் குற்றவாளிகளாக நடத்தப்படுவார்களாக அல்லது போர்க் கைதிகளாக நடத்தப்படுவார்களாக என்ற தெளிவான விளக்கத்தை ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
IBC Tamil