ஆஸ்திரேலிய தேர்தல்: கோவிட்-19 தொற்றியோர் தொலைபேசிவழி வாக்களிக்கலாம்

ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 17 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தொலைபேசி மூலம் வாக்களிக்கலாம் என்றும் அதற்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆண்டனி அல்பனிஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி

53% முன்னிலை வகிப்பதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசனின் ஆளும் பழமைவாத கட்சிக்கு 47% ஆதரவு உள்ளதாகவும் கடைசி நேர கருத்துகணிப்பு கூறுகிறது. மெல்பர்னில் அமைக்கப்பட்டிருந்த முன்கூட்டிய வாக்களிப்பு மையத்தில் நேற்று பலர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

 

 

Tamilmurasu