மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷியா ராணுவம்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 87-வது நாளை எட்டியுள்ளது.

மரியுபோல் நகரில் ரஷியாவின் வசம் சிக்காமல் எஞ்சி இருந்த அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளதாக ரஷிய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

சரணடைந்த உக்ரைன் வீரர்கள் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என  கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்துவிட்டது என ரஷியா ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் அங்கு உக்கிரமான தாக்குதலை ரஷியா நடத்தி வருகிறது. ரஷிய போர் விமானங்கள் அங்கு குண்டுமழை பொழிந்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளது என அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

 

 

Malaimalar