கோவிட்தொற்றுக்கு பிறகு ‘மீட்புக்கான புதிய திட்டத்தை ‘ PSM முன்வைக்கிறது

பார்ட்டி சோசியலிஸ் மலேசியா (PSM) நாட்டின் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், மக்களின் நலனுக்காக நமது அடிப்படை ஆதரவு தூண்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் முன்மொழிவுகளுடன் புதிய மீட்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டம் “தேசிய மீட்புப் பிரச்சாரம் – நமது தலைவிதியைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்! மக்களின் 5 கோரிக்கைகள் .”

PSM பொதுச்செயலாளர் A சிவராஜன் ( மேலே ), நேற்று வெளியீட்டு விழாவுடன் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பலர் வேலைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பை இழந்த நிலைமை முதலாளித்துவத்தின் தோல்விகளை கோவிட் தொற்றுநோய் அம்பலப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

“அரசாங்கம்  மக்களுக்கு அடிப்படை அத்தியாவசிய சேவைகளை வழங்குவது கூட தனியார்மயமாக்க  ஊக்குவிப்பது என்றவகையில் அது   த்னது பொறுப்பில் இருந்து திசை மாறி வருகிறது”.

“முப்பது வருட கால தனியார்மயத்திற்குப் பிறகு , பலவீனமான பொது சுகாதார அமைப்பு, விலையுயர்ந்த கல்வி,  பாதுகாப்பு அற்ற  தொழிலாளர்கள், ஆபத்தான வேலைகளின் அதிகரிப்பு, கட்டுப்படியாகாத வீடுகள் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பரந்த ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுடன் நாம் உள்ளோம்”.

“கோவிட்  ஏற்கனவே பலவீனமான சமூக பாதுகாப்பு அமைப்பை சிதைத்தது, ஏழை குடும்பங்களையும் M40 கூட திடீர் வறுமைக்கு தள்ளியது,” என்று  சிவராஜன் கூறினார்.

மேலும், தொற்றுநோயின் கடினமான பாடங்களைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும், அதனால் மீண்டும் அதே தவறுகளைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

“இந்த தோல்விகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும், இதன் மூலம் தொற்றுநோயிலிருந்து மீண்டு வர முடியும், அதே நேரத்தில் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க சமூக பாதுகாப்பு வலையமைப்பின் அடித்தளத்தை வலுப்படுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.

“இந்த அனுபவங்கள் நாம் மீண்டும் வழக்கம் போல் வணிகத்திற்குத் திரும்ப முடியாது என்பதையும், அதற்கு மாறாக  எதிர்கால நெருக்கடிகளுக்கு நம்மை மேலும் நெகிழ்திறன் கொண்டவர்களாக மாற்றுவதற்காக  ஒரு புதிய சமூக பொருளாதார   சீரமைப்பு தேவை என்ற பாடத்தை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளன”.

“தொற்றால்  பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மிகக் குறைவாக பாதிக்கப்பட்டவர்கள்  அரசியல் மற்றும் கார்ப்பரேட் சார்பானவர்கள்தான்.

“இலாபம் மற்றும் எப்படி பணத்தை கொண்டு பணம் திரட்டுவது என்ற தாராளவாத, பெருநிறுவன உந்துதல் கொண்ட பொருளாதார மாதிரியைதான்,   தற்போது இருக்கும் இரண்டு வகை அரசியல் கூட்டணிகலும் ஏற்றுக் கொண்டுள்ளன.  இது கட்டமைப்பு மாற்றம் குறைந்தபட்ச முயற்சியுடன் மேலோட்டமான  ஆளும் அரசியல்வாதிகளை மட்டும்தான் மாற்றும். உண்மையான மாற்றம் அல்ல” என்று அவர் மேலும் கூறினார்.

ஐந்து முக்கிய கோரிக்கைகள் 

வங்கிகளுக்கு எளிதாக கடன் வழங்குவதோடு, தொழில்களை பாதுகாக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வணிகங்களுக்கு ரொக்க ஊக்குவிப்புகளை வழங்குவதோடு மட்டும் அரசு நிறுத்தக்கூடாது என்கிறார் சிவராஜன்.

  1. சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்
  2. வேலைப் பாதுகாப்புத் திட்டம்
  3. வீட்டுரிமையை  மனித உரிமையாக்குதல்
  4. பொது சுகாதாரச் சேவைகளை மேம்படுத்துதல்
  5. பருவ நிலை நெருக்கடியை கையாளுதல்

இவைகளின் வழி, மாற்றியமைக்கப்பட்ட உலகளாவிய அடிப்படை வருமானத்தை அறிமுகப்படுத்துதல், வேலைவாய்ப்பில் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்களை அறிமுகப்படுத்துதல், சுகாதார அமைச்சகத்தின் ஒதுக்கீட்டை அதிகரித்தல் மற்றும் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற தீர்வுகளும் இதில் அடங்கும்.

பினாங்கு, கெடா, பேராக், கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் போன்ற நாடு முழுவதும் உள்ள நகரங்களில் நேற்று (22/5) ஒரே நேரத்தில் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.