அமெரிக்காவில் 18 பள்ளிச் சிறார்களைச் சுட்டுக் கொன்ற 18 வயது இளைஞன்

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 சிறுவர்களும் ஓர் ஆடவரும் பலியாயினர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞனும் டெக்சஸ் காவல் துறையினரால் கொல்லப்பட்டான்.

அமெரிக்காவின் டெக்சஸ் அருகே யுவால்டே கவுண்டி என்ற நகரில் சாண்டி ஹூக் என்ற  பள்ளியில் இந்தச் சம்பவம் நேற்று (மே 24) நிகழ்ந்துள்ளது. இங்கு புகுந்த மர்ம நபர் கண்ணில்பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டான். இறந்த குழந்தைகள் அனைவரும் 7 முதல் 10 வயதுடைய சிறார்கள் என அறியப்படுகிறது.

மேலும், இரண்டு காவல்துறை அதிகாரிகளும் சிறிய அளவில் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்கள் எதுவும் இன்னும் தெரியவில்லை.

டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு தொடர்பாகக் கருத்துரைத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தக் குழந்தைகளுக்காக அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
“ஏதுமறியாத அழகிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், ஒரு போர்க்களத்தைப் போல, தன் நண்பர்கள் கொல்லப்பட்ட காட்சியையும் குழந்தைகள் நேரில் பார்த்துள்ளனர். இனி காலம் முழுக்க இதே நினைவுகளுடன் இந்தக் குழந்தைகள் வாழ வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டார்.
Tamilmurasu