ஈரான் கட்டட விபத்தில் 24 பேர் மரணம்

10 மாடி வர்த்தக கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் மாண்டோர் எண்ணிக்கை 24ஆக உயர்ந்தது. சென்ற திங்கட்கிழமை நடந்த இந்த விபத்தில் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். 48 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கட்டடத்தின் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்தின்போது கட்டடத்தினுள் கிட்டத்தட்ட

150 பேர் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஈரானின் துணை அதிபர் முகமது மோக்பிர் விபத்து நடந்த இடத்தை நேற்று பார்வையிட்டார்.

 

 

Tamilmurasu