டெக்சஸ் துப்பாக்கிச்சூட்டில் மாண்ட ஆசிரியரின் கணவர் சோகத்தில் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சஸ் பள்ளியில் நடந்த கொடூர துப்­பாக்­கிச்­சூட்டு சம்­பவத்­தில் மாண்ட ஆசிரியர் ஒருவரின் கணவர் மாரடைப்பால் மாண்டார்.
தம்முடைய மனைவி இர்மா கார்சியாவின் இறுதிச் சடங்குக்காக ஆயத்தப் பணிகள் செய்துகொண்டிருந்தபோது ஜோ கார்சியா திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

தம்பதிக்கு திருமணமாகி 25 ஆண்டுகளான நிலையில் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

“அவர் தமது மனைவியை ஆழமாகக் காதலித்தார். மனைவி பிரிந்த துக்கம் தாளாமல் அவர் உயிர் பிரிந்தது என்று நாங்கள் எண்ணுகிறோம்,” என்று அவரது நெருங்கிய உறவினர்கள் கூறினர்.

டெக்­ச­ஸின் உவால்டி நக­ரில் உள்ள ரோப் தொடக்­கப் பள்­ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது, பிள்ளைகளைப் பாதுகாக்க முயன்றபோது இர்மா கார்சியாவும் மற்றொரு ஆசிரியரும் மாண்டனர்.

இச்சம்பவத்தில் 19 பள்­ளிக் குழந்­தை­களின் உயிர் பறிக்கப்பட்டது.

 

 

Tamilmurasu