ர‌ஷ்யாவிடம் இருந்து தப்பிக்க பின்வாங்குகிறது உக்ரேன் படை

உக்­ரே­னின் கிழக்­குப் பகுதி­யில் ர‌ஷ்­யப் படை­கள் வேக­மாக முன்­னேறி வரு­வ­தைத் தொடர்ந்து, ர‌ஷ்­யப் படை­க­ளி­டம் சிக்­கா­மல் இருப்­ப­தற்­காக லுஹான்ஸ்க் பகு­தி­யில் இருந்து உக்­ரே­னி­யப் படை­கள் பின்­வாங்க வேண்­டி­யி­ருக்­கும் என்று அதி­காரி ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

அப்­படி உக்­ரேன் படை­கள் அங்கிருந்து பின்­வாங்­கி­னால், உக் ரேனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் ஆகிய பகு­தி­களை முழு­மை­யா­கக் கைப்­பற்ற வேண்­டும் என்ற ர‌ஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னின் இலக்கை ர‌ஷ்யப் படைகள் எளி­தில் அடைந்­து­வி­ட­லாம்.

ஆனால் லுஹான்ஸ்க் நகர ஆளுநரான செர்ஹி கெய்­டாயோவோ, தங்கள் பகு­தியை ரஷ்­யப் படை­க­ளால் கைப்­பற்ற முடியாது என்­கி­றார்.

அதே­ச­ம­யம் டோன்­பாஸ் நக­ரத்­தின் சீவி­ரோ­டோ­னெட்ஸ்க் பகு­தி­யில் ர‌ஷ்­யப் படை­கள் நுழைந்­து­விட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்,

ர‌ஷ்­யத் தாக்­கு­த­லில் லுஹான்ஸ்க் வட்­டா­ரத்­தில் கிட்­டத்­தட்ட 90 விழுக்­காட்டுக் கட்­ட­டங்­கள் சேத­ம­டைந்து­விட்­டன.

10,000 ர‌ஷ்யப் படையினர் கிழக்குப் பகுதியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

டோன்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ர‌ஷ்யா தன்னிடம் உள்ள அனைத்து படை பலத்தையும் பயன்படுத்துவதாக உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி சொன்னார். அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

மரியபோல் எஃகு ஆலையில், சிக்கியிருந்த உக்ரேனிய வீரர்கள் பல வார பேச்சுவார்த்தைக்குப் பிறகு ர‌ஷ்யாவிடம் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்­கி­டையே, டோனெட்ஸ்க் வட்டாரத்தில் உள்ள லைமன் நகரம் முழு­மை­யாக தங்­கள் கட்­டுப்­பாட்­டிற்­குள் வந்­து­விட்­ட­தாக ர‌ஷ்­யத் தற்­காப்பு அமைச்சு சொன்­னது.

லைமன் சிறிய நகரம் என்றாலும் உக்ரேனில் ர‌ஷ்யப் படைகள் முன்னேறி வருவதை இது காட்டுவதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், உக்ரேனைப் பலப்படுத்த விரைந்து ஆயுத உதவி செய்யுமாறு பிரிட்டி‌ஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனை, உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

Tamilmurasu