பிரேசில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

பிரேசில் நாட்டில் வடகிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின. வெள்ளத்திற்கு அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய மாகாணங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

அந்நாட்டின் வடகிழக்கே அமைந்த பெர்னாம்புகோ மாகாணத்தின் தலைநகர் ரீசிப் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்பு குழுவினர், ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்துள்ளனர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

 

 

Malaimalar