கோதுமை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகமாக இருப்பதால், ஜூன் மாத இறுதிக்குள் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மாமாக் உணவகங்களில் ரொட்டி சனாய் விலை 20 சென் முதல் 50 சென் வரை உயரக்கூடும்.
மலேசிய முஸ்லீம் உணவகத் தொழில்முனைவோர் சங்கத்தின் உறுப்பினர்கள், தற்போது பழைய விலையிலேயே தொடர்கின்றனர் என்று சங்கத்தின் தலைவர் ஜவஹர் அலி தாயிப் கான் தெரிவித்தார்.
“தற்போது, ரொட்டி சனாய் ஒன்று ரிம1.20 முதல் ரிம1.70 வரை விற்கப்படுகிறது, ஆனால் 25 கிலோ கோதுமை மாவின் விலை இப்போது ரிம65 ,முன்னதாக கோதுமை மாவின் விலை ரிம45க்கு விற்கப்பட்டது,” என்று அவர் பத்திரிகையிடம் கூறினார்.
இதை கட்டுப்படுத்தாவிட்டால், ஜூன் மாத இறுதிக்குள் கோதுமை சார்ந்த பொருட்களின் விலையில் சிறிதளவு விலை அதிகரிப்பு ஏற்படும் என நான் கவலைப்படுகிறேன், என்று அவர் கூறினார்.
உணவகங்கள் நேரடியாக கோதுமை மாவை வாங்காமல், முகவர்களிடம் இருந்து உனடடியாக சமைக்கும் ரொட்டி மாவை வாங்குகின்றன.
சங்கத்தின் 4,500 உறுப்பினர்களால் நடத்தப்படும் 9,000 க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன, அவர்கள் சிறிய லாபம் மட்டுமே பெறுகின்றனர் என்று ஜவஹர் அலி கூறினார்.
உணவுப் பொருட்களின் விலையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டால், அது உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு முன்கூட்டியே அனுப்பப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதி ஆதாரங்களின் பட்டியலில் அதிக கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளைச் சேர்ப்பது போன்ற பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் உடனடியாக ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் என்று அவர் நம்புவதாக கூறியுள்ளார்.
FMT