உணவுப் பாதுகாப்பு நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் – மன்னர்

உலகம் தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளதால், உணவுப் பாதுகாப்பு நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும், என்று யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா கூறியுள்ளார்.

உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், வாழ்க்கைச் செலவு நியாயமான அளவில் இருப்பதை உறுதி செய்யவும் நீண்ட காலத் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

“அதிக வாழ்க்கைச் செலவு, உணவுப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு அரசாங்கமும் அனைத்து மட்டங்களிலும் உள்ள தலைவர்கள் தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன்.”

“எனது அறிவுரை என்னவென்றால், நாடு உணவுப் பாதுகாப்புப் பிரச்சனைகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் உயரும் போது,பிற சர்ச்சைகளை பெரிதாக்காமல் ,நாம் அனைவரும் மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இன்று இஸ்தானா நெகாராவில் அவரது அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து, “பிலா சுடா மேரா, கபூர் சாலாக்கான் குஞ்சிட்  டான் குஞ்சிட் சலாக்கான் கபூர்” – எதாவது தவறு நடந்தால் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவது போன்ற அணுகுமுறை பல சவால்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவாது,” என்று மன்னர் கூறினார்.

சிக்கனமாக இருக்கவும், விவேகத்துடன் செலவு செய்யவும் மலேசியர்களை அறிவுறுத்தினார்.

சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், கடுமையான வறுமையை ஒழிக்கவும் அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இத்தகைய திட்டங்கள் 2025 ஆம் ஆண்டிற்குள் கடுமையான வறுமையை ஒழிக்கும் இலக்கை அடைய முடியும் என்றும் மன்னர் நம்பிக்கை தெரிவித்தார்.

FMT