பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியால் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டது போரிஸ் ஜான்சன் பதவி விலகும்படி சொந்த கட்சியினரே வலியுறுத்தி வந்தனர்
இங்கிலாந்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார்.
கடந்த 2020 ஆண்டு கொரோனா முதல் அலையினால் இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி லண்டனின் பிரதமரின் அலுவலக இல்லத்தில் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து போரிஸ் ஜான்சன் விருந்து வழங்கினார்.
இதற்கு கண்டனம் எழுந்ததால், தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார். இதேபோல் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப்பின் இறுதி சடங்கின் போது பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது கடும் விமர்சனங்களை எழுப்பியது.
இந்த இரு விவகாரங்களை முன் வைத்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று, சொந்த கட்சியினரே போர் கொடி தூக்கினர்.
இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பெரும்பான்மை எம்.பி.க்கள் கன்சர்வேடிவ் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது.
நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 211 எம்பிக்கள் ஆதரவாகவும், 148 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். 59 சதவீத பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜான்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Malaimalar