முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில், நீதிபதி நஸ்லான் முகமட் கசாலியின் கருது வேற்றுமையை மேற்கோள் காட்டி, தனது தண்டனையை ரத்து செய்ய முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.
நஜிப், தனது விசாரணையில் புதிய ஆதாரங்களைச் சேர்க்க விண்ணப்பிக்குமாறு வழக்கறிஞர் ஷபி அப்துல்லா தலைமையிலான தனது சட்டக் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக, நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
நீதிபதி நஸ்லான் முகமட் கசாலியின் வங்கிக் கணக்கில் விவரிக்கப்படாத ரிங்கிட் 1 மில்லியனுக்கும் அதிகமான தொகை குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில் இவ்வாறாக அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது நீதிபதி நஸ்லான், நஜிப்பை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.
“தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் தீங்கிழைக்கும்” என்றும், ஒரு நீதிபதியாக இருக்கும் தனது நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்தில் உள்ளன என்று நஸ்லான் தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளின் மீது போலீஸ் புகார் பதிவு செய்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில், நஸ்லான் நஜிப்பை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்தார்.
நஜிப்பின் மேல்முறையீடு கூட்டரசு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த விண்ணப்பம் நஜிப்பின் வாக்குமூலத்தால் ஆதரிக்கப்பட்டது என்றும் பெக்கான் எம்.பி.க்கு உயர் நீதிமன்றத்தில் நியாயமான விசாரணை கிடைக்கவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் ஷபி கூறியுள்ளார்.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் மேபேங்க் இன்வெஸ்ட்மென்ட் பேங்க் பெர்ஹாட், மலாயன் பேங்கிங் பிஎச்டியின் மேபேங்க் துணை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பதை அவர்கள் தற்பொழுது கண்டறிந்ததாக அவர் கூறினார்.
இது, மேபேங்க் இன்வெஸ்ட்மென்ட்டின் துணை நிறுவனமான பின் பீக்கீர்-உடன் கூட்டாக நடத்தப்பட்டது.
“இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தொடர்புடைய காலகட்டத்தில் நஸ்லான் மேபாங்கில் இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். அவர் ராஜினாமா செய்யும் வரை, ஒரு கட்டத்தில் முழு மேபேங்க் குழுமத்தின் பொது ஆலோசகராகவும், நிறுவன செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
“இதன் பொருள் என்னவெனில் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் உருவாக்கம் மற்றும் கட்டமைப்பில் மேபேங்க் எவ்வாறு ஈடுபட்டுள்ளது என்பது பற்றிய தகவல் அவருக்கு தெருந்திருக்கும்” என்று ஷபி கூறினார்.
நஜிப்பின் கணக்கிற்கு அனுப்பப்பட்ட ரிங்கிட் 42 மில்லியன், அவரது ஆரம்பக் கட்டணங்களின் ஒரு பகுதியாக இருந்தது, இது மேபாங்க் புத்ரா பெர்டானா டெவலப்மென்ட் PPD க்கு வழங்கிய ரிங்கிட்140 மில்லியன் கடன் வசதியின் ஒரு பகுதியாகும் என்றும், அது ஓய்வூதிய நிதி KWAPயில் இருந்து பெறப்படவில்லை என்றும் ஷபி கூறினார்.
மேபேங்க் வழங்கிய கடன் வசதி குறித்து நீதிபதிக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும், நஸ்லான், மற்றும் அரசுத் தரப்பு இதை தொடர்புடைய அமலாக்க நிறுவனத்திடம் வெளிப்படுத்தத் தவறிவிட்டனர்.
சுதந்திரமான மின் உற்பத்தியாளர் தஞ்சோங் எனர்ஜி ஹோல்டிங்ஸ் Sdn Bhd ஐ கையகப்படுத்துவதற்காக 1எம்டிபிக்கு ரிங்கிட் 4.17 பில்லியன் கடன் வசதியை அவர்கள் ஒப்புதல் அளித்தபோது நஸ்லான் மேபேங்கின் பொது ஆலோசகராக இருந்தார் என்று அவர் கூறினார்.
எஸ்ஆர்சி விசாரணை இன்னும் தொடங்காத நிலையில், செப்டம்பர் 20, 2018 அன்று 1எம்டிபி வழக்கு தொடர்பாக அமர்வு நீதிமன்றத்தில் நஜிப் குற்றம் சாட்டப்பட்டார். ஆதலால் “இது நீதிபதி நஸ்லானை 1எம்டிபி வழக்கில் சாட்சியாக இருக்கச் செய்யும்.
“1எம்டிபிக்கு கடனில் அவர் ஈடுபட்டது குறித்து தனிப்பட்ட நிலைப்பாடு இருந்தபோதிலும், வேறு ஒரு உயர் நீதிமன்றத்தில் 1எம்டிபி வழக்குக்காக அவர் ஒரு சாத்தியமான சாட்சியாக இருக்க முடியும் என்பதை அறிந்திருந்தும், நஸ்லான் தனது தனிப்பட்ட ஈடுபாடு மற்றும் ஆர்வம் காரணமாக இந்த வழக்கில் இதை அறிவிக்கத் தவறிவிட்டார்.”
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான நஜிப்பின் மேல்முறையீட்டிற்குத் தலைமை தாங்கும் முன் அவர்களின் விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று ஷபி விரும்புகிறார், கூட்டாட்சி நீதிமன்றம் தங்களுடன் உடன்பட்டால், பாரபட்சத்திற்கு எதிரான விதியை மீறியதால் நஸ்லானின் தீர்ப்பு ரத்து செய்யப்படும் என்று ஷபி கூறினார்.
அவர் இந்த வழக்கைக் கேட்டிருக்கக் கூடாது. வழக்கிலிருந்து தன்னை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்.”எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் மற்றும் 1எம்டிபி பற்றிய விவரத்தை நீதிபதி அறிந்து கொண்டிருந்ததால், இந்த வழக்கு பாரபட்சமான முடிவை வழங்கியுள்ளதாக கருதப்படும் என்று ஷபி கூறியுள்ளார்.
” நஜீப்பிற்கு உயர்நீதிமன்ற விசாரணையில் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஏனெனில் இந்த விசாரணை நியாயமற்றது, தலைமை தாங்கிய நீதிபதி குறைந்தது மூன்று முதல் நான்கு பகுதிகளில் பெரிய கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தார்” என்று ஷபி தெரிவித்துள்ளார்.
FMT