ஊழியர் பற்றாக்குறையால் ஆஸ்திரேலிய வர்த்தகங்கள் கடுமையான சவால்களை
எதிர்நோக்குகின்றன.
போதிய ஊழியர்கள் இல்லாததால் திட்டமிட்டபடி அவற்றால் சேவை வழங்க முடியவில்லை.
குறைந்த நேரத்துக்கு மட்டுமே வர்த்தகம் செய்ய முடிவதால் எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியவில்லை.
இதனால் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமரான ஆண்டனி
அல்பனிசிக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்த நிறு
வனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
2017ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டிலும் அதிகபட்சம் 160,000 வெளிநாட்டு ஊழியர்களை ஆஸ்திரேலிய நிறுவனங்கள் வேலையில் அமர்த்தலாம்.
ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலை ஏற்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா அதன் எல்லைகளை மூடியது.
இதன் காரணமாக வெளிநாட்டு ஊழியர்களின் வரவு தடைபட்டது.
தற்போது படிப்படியாக வழக்கநிலை திரும்புவதால் கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.
Tamilmurasu