தெற்கு இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
காசா முனை பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் இயக்கத்தினர் அடிக்கடி இஸ்ரேல் மீது ஏவுகனைகளை வீசி தாக்குதல் நடத்துகிறார்கள். அதேபோல் ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் தெற்கு இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் பதிலடி தாக்குதலை மேற்கொண்டது.
காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு இஸ்ரேலில் உள்ள குடிமக்களை நோக்கி நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத இலக்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு ஹமாஸ் ராணுவ சாவடிக்குள் உள்ள ஆயுத தளத்யுதைம், ஹமாசுக்கு சொந்தமான 3 ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தியது என்று கூறியது.
மேலும் தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் ஏவிய ராக்கெட்டுகள், இஸ்ரேலிய வான் பாதுகாப்புகளால் இடை மறிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் வான்வழி தாக்குதலால் ஹமாஸ் இயக்கத்தில் முக்கிய தளபதி ஒருவர் பலியானார்.
Malaimalar