36 மணி நேரத்தில் 3 ராக்கெட்டுகள்… ஸ்பேஸ்எக்ஸ் அசத்தல்

ஜனவரி மாதமும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக 3 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவியது ராக்கெட்டின் முதல் நிலை ஸ்பேஸ்எக்ஸ் ட்ரோன்ஷிப்பில் செங்குத்தாக தரையிறங்கியது.

உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி தொடர்பான பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது அந்த நிறுவனம் 36 மணி நேரத்தில் 3 ராக்கெட்களை விண்ணில் ஏவி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு ஜனவரி மாதமும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக 3 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி சாதனை படைத்து இருந்தது. தொலைத்தொடர்பை மேம்படுத்துவதற்காக புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனவெரல் விண்வெளிப் நிலையத்தில் இருந்து நேற்று தொலைத்தொடர்பு செயற்கைக் கோளுடன் ‘பால்கன் 9’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

புறப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு, ராக்கெட்டின் முதல் நிலை ஸ்பேஸ்எக்ஸ் ட்ரோன்ஷிப்பில் செங்குத்தாக தரையிறங்கியது. ராக்கெட்டில் இருந்து பிரிந்து பயணித்த செயற்கைக் கோள், திட்டமிட்டபடி ஒரு மணி 50 நிமிடங்களில் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது.

 

Malaimalar