இஸ்ரேலின் நாடாளுமன்றம் அடுத்த சில நாள்களில் கலைக்கப்படும் என்று பிரதமர் நஃப்டாலி பென்னட் (Naftali Bennett) அறிவித்துள்ளார்.
8 கட்சிகள் கொண்ட கூட்டணியிலிருந்து சில உறுப்பினர்கள் வெளியேறியதால் நாடாளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மை இல்லாமல் போனது.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவு எளிதாக எடுக்கப்படவில்லை என்றபோதும் அது தேசிய நலனுக்காக முடிவுசெய்யப்பட்ட ஒன்று என்று திரு. பென்னட் வலியுறுத்தினார்.
பொதுத்தேர்தல் நடைபெறும்வரை திரு. பென்னட்டுக்குப் பதிலாக வெளியுறவு அமைச்சர் யாயிர் லாபிட் (Yair Lapid) இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார்.
அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெறக்கூடிய தேர்தல், மூவாண்டுகளில் நடைபெறும் 5ஆவது தேர்தல் ஆகும்.
எதிர்த்தரப்புத் தலைவர் பென்யமின் நெட்டன்யாஹூ (Benjamin Netanyahu) அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவிருப்பதாகச் சூளுரைத்துள்ளார்.
Seithimediacorp